2022 ஆம் ஆண்டில் யோர்க் பிராந்தியத்தில் (York Region) 15 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ரொரன்றோவைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 6 ஆம் திகதி பொலிஸாரை அணுகி, 2022 ஆம் ஆண்டில் தனது 15 வயதில் சந்தேகநபருடன் “பாலியல் உறவில்” இருந்ததாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் (Markham) பகுதியில் சந்தேகநபர் கற்பித்து வந்த இசைக்கூடத்தின் (Music studio) மூலமே பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் சந்தித்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், இவர் பெருநகர ரொரன்றோ பகுதியின் (GTA) பிற இடங்களிலும் இசை கற்பித்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று, ரொரன்றோவைச் சேர்ந்த 33 வயதான வைலி ஜி ஹின் லாம் (Wylie Zi Hin Lam) என்பவரைக் கைது செய்த பொலிஸார், அவர் மீது பாலியல் குறுக்கீடு (Sexual interference), பாலியல் சுரண்டல் (Sexual exploitation) மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் (Sexual assault) ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இருக்கலாம் என நம்புவதால், அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் புலனா