12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி பொதுவாக ஒரு விஷயம் தெரிவிக்க அது விஜய்க்கு தான் என்று பேசப்படுகிறது.
அரசியலில் பிசியாக இருந்த ரோஜா தற்போது லெனின் பாண்டியன் படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் லெனின் பாண்டியன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஜா தெரிவித்த விஷயம் வைரலாகிவிட்டது.
விஜய் பற்றி ரோஜா கூறியதாவது, விஜய் நேரில் சென்றதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக சிலர் திட்டுகின்றனர். ஆனால் அவர் செல்லாவிட்டாலும் திட்டுகிறார்கள் என்றார்.
அவர் பொதுவாக கூறியதாவது,நடிகர்கள் எல்லாம் அரசியல் செய்கின்றனர். அரசியல்வாதிகள் நடிக்கின்றனர். அரசியலுக்கு வந்த உடனேயே முதல்வராகணும், கையெழுத்து போடணும் என்பது சினிமாவில் தான் முடியும். நிஜத்தில் நடக்காது. அரசியலில் இறங்கி உழைப்பாளி மாதிரி வேலை செய்ய வேண்டும். சினிமா ஹீரோக்கள் கடவுள் மாதிரி, ராஜா மாதிரி. மற்றவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தால் அவர்கள் வந்து உட்காருவார்கள். அந்த பவரை, பெயரை என்ஜாய் செய்யலாம். ஆனால் அரசியலில் அப்படி கிடையாது என்றார்.
ரோஜா என்னவோ பொதுவாக இப்படி சொல்ல 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக முதல்வராக நினைக்கும் தவெக தலைவர் விஜய்யை தான் அப்படி பேசியிருக்கிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். அரசியல் கட்சி துவங்கிய விஜய் அடுத்த ஆண்டு தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். அவரின் கட்சியினரோ அடுத்த முதல்வர் ஸ்டாலின் கிடையாது எங்கள் விஜய் அண்ணா தான் என்கிறார்கள். இந்த நேரத்தில் தான் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகிவிட முடியாது என்று ரோஜா தெரிவித்திருக்கிறார்.
ரோஜா சொல்வதும் சரி தான். அரசியலில் இறங்கி வேலை பார்த்து அனுபவம் பெற்ற பிறகே முதல்வராக முடியும். ஆனால் விஜய்யோ வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட்டம் கூடிவிடும் என்று பனையூர் பங்களாவிலேயே இருக்கிறார். அவர் எப்பொழுது வெளியே வந்து இறங்கி வேலை செய்ய, எப்பொழுது முதல்வர் ஆக என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.
விஜய்ணா எல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவர் வீட்டில் இருந்தே ஒரு வார்த்தை சொன்னால் போதும் எல்லாம் அதுவாக நடக்கும். ஓட்டு தானாக கிடைக்கும். யார் என்ன சொன்னாலும், கிண்டல் செய்தாலும் எங்கள் அண்ணன் அடுத்த ஆண்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர்.