10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்; மீண்டும் தேடும் பணி

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமலாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதைத் தேடும் பணி இந்த மாதம் மீண்டும் தொடங்கப்படுவதாக மலேஷியா போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம்(3) வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ டிசம்பர் 30 ஆம் திகதி முதல் கடலடி தேடலை மீண்டும் தொடங்கும் எனவும், இது 55 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தேடலானது, காணாமல் போன விமானம் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ள பகுதிகளின் மீது கவனம் செலுத்தும், ஆனால் துல்லியமான இடங்கள் வெளியிடப்படவில்லை.

2014 மார்ச் 8 ஆம் திகதி, கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்குச் சென்ற MH370 விமானம் திடீரென பாதை மாறி ரேடார் வரம்பில் இருந்து மறைந்தது. விமானத்தில் 12 மலேஷிய குழுவினர்கள் மற்றும் 227 பயணிகள் பயணித்துள்ளனர்.

அதிகமானோர் சீனப் பிரஜைகள். மேலும் மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், உக்ரைன், கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருந்தனர்.

விமானம் காணாமல் போனதிலிருந்து, பல நாடுகள் இணைந்து இந்தியப் பெருங்கடலின் மிகப்பெரிய பகுதிகளைத் தேடி வந்துள்ளன.

இருப்பினும், முக்கிய எச்சங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு பிரெஞ்சு தீவான ரீயூனியனில் கிடைத்த விமான இறக்கை பகுதி MH370 யிலிருந்ததே என உறுதி செய்யப்பட்டது. ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்திலும் சில சிதைவுகள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் பெரிய எச்சங்கள் அல்லது உடல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் விசாரணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக மலேஷியா தெரிவித்தது.

‘ஓஷன் இன்ஃபினிட்டி’யுடன் “கண்டுபிடிக்கப்படாவிட்டால் கட்டணம் இல்லை” என்ற ஒப்பந்தத்தின் கீழ் 15,000 சதுக்க கிலோமீட்டர் புதிய பகுதியில் தேடல் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரலில், தெற்கிந்தியப் பெருங்கடலில் மோசமான வானிலை காரணமாக தேடல் நிறுத்தப்பட்டது. MH370, 2014 மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை 12.41க்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 6.30க்கு பீஜிங்கில் தரையிறங்க வேண்டியிருந்தது.

இரவு 2.14க்கு கடைசியாக இராணுவ ரேடாரில் மலாக்கா நீரிணையின் மேல் மேற்குத் திசையில் பறந்துகொண்டிருந்ததாக பதிவாகியுள்ளது. அரைமணிநேரத்துக்குப் பிறகு விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்தோரின் குடும்பத்தினர், உண்மையை அறிந்து கொள்ளவும், எதிர்கால விபத்துகளைக் தவிர்க்கவும் தொடர்ந்த தேடலை வேண்டி வருகின்றனர். சிலர் 2016ஆம் ஆண்டு மடகாஸ்கர் சென்று சிதைவுகளைத் தேடினர்.

மேலும் பல நிறுவனங்களுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குகளும் தொடரப்பட்டன. 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தலைமையிலான 120,000 சதுர கிலோமீட்டர் கடலடித் தேடல் நிறுத்தப்பட்டது.

அதே ஆண்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை, பதில்களை வழங்க முடியாதது “மிகப் பெரிய துயரம்” எனக் கூறியது.

2018ஆம் ஆண்டு மலேஷியாவின் விசாரணை அறிக்கை, விமானம் தானியக்க இயக்கத்தில் அல்லாமல் கையேடு முறையில் திருப்பப்பட்டதாகவும், “மூன்றாம் தரப்பின் தலையீட்டை” நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

ஆனால் விமானிகள் நோக்கமுடன் விபத்து ஏற்படுத்தியதாக இருந்த சில ஊகங்களையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் நிராகரித்தது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தப் புதிய முன்னேற்றம் MH370 உறவினர்களுக்கு முடிவு கிடைக்க மலேஷியா அரசு எடுத்துள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது” என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இந்த நிதி ஒதுக்கிடு

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள