லோகேஷ் கனகராஜ் DC திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்கி வர இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் தொடர்பாக ஒரு தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் அதிரடியான ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கியிருக்கும் சம்பளம் தொடர்பான தகவல் தான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் தான் தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றது. அதாவது இயக்குனராக ஐம்பது கோடி சம்பளமாக வாங்கும் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிப்பதற்காக 35 கோடி வரை சம்பளமாக வாங்குகின்றாராம். என்னதான் லோகேஷ் கனகராஜ் ஒரு இயக்குனராக இந்தியளவில் பிரபலமானவராக இருந்தாலும் DC அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்.