ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்திய கப்பல்களுக்கு அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13 ஆவது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.

ran

அசோக ரன்வலவுக்கு நீதிமன்றம் பிடியாணை

March 15, 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த

ma

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

March 15, 2026

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல்

irakk

43,000 கட்டடங்கள் ஈரானில் சிதைவு

March 15, 2026

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள்

3

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

March 15, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி

56

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

March 15, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில்

katt

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர்

March 15, 2026

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

mack

நடனப் புயல் – இசைப் புயல் பாடல் மாமல்லபுரத்தின் சிற்பங்களின் பின்னணியில்…

March 15, 2026

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் ‘மாக்கரீனா..’ எனத் தொடங்கும் பாடலும், அதற்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா

si

சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம்

March 15, 2026

‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல

d

‘நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம் ‘ – கென் கருணாஸ்

March 15, 2026

‘எம்முடைய திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தில் பணியாற்றும்போது தனுசிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். நான்

ne

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம்

March 15, 2026

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் 16ஆவது நாட்களை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம்

45

‘ 4 விண்டோஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

March 15, 2026

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களான சத்யராஜ் – வெற்றி முதன்மையான வேடங்களில் இணைந்து நடித்திருக்கும் ‘4 விண்டோஸ்’ படத்தில் இடம்பெற்ற

5

ஆதார வைத்தியசாலை பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம்

March 15, 2026

டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான