ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

வரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த கார் ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையை முச்சக்கர வண்டி ஒன்று கடக்க முயன்றபோது, வலது திசையிலிருந்து மிக அதிக வேகத்துடன் வந்த கார் ஒன்று மோத முற்பட்டது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி குமார யாப்பாவிடம் எமது செய்தியாளர் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்,

“முச்சக்கர வண்டியில் இருந்த கேமரா பதிவில் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏனைய பாதுகாப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மிக விரைவில் சம்பந்தப்பட்ட வாகனமும் அதன் ஓட்டுநரும் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.”

பொது இடங்களிலும் புனித தலங்களுக்கு அருகிலும் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

Accident

கேகாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 20, 2026

கேகாலை – ஹேனகந்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

worl

உலக முடிவில் விழுந்த யாழ். பல்கலைக்கழ மாணவி

March 20, 2026

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க

C B Canada

கனேடிய மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

March 20, 2026

கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25%

Vij

நடிகர் விஜய் தேர்தலில் நிற்க முடியாது?

March 20, 2026

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் போதும்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து

sure

அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

March 20, 2026

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்

IMF

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு

March 20, 2026

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை

qr

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இன்னும் சிக்கலா?

March 20, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல்

an.

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய முக்கிய கலந்துரையாடல்

March 20, 2026

வலுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

See

ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

March 20, 2026

வரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி

MAram

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுசெல்லவிருந்த பாலைமரகுற்றிகள் மடக்கிப்பிடிப்பு!

March 20, 2026

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி A35 பிரதான

Naga

வட மாகாண சிங்கள மக்களின் உரிமைகள் சரியாக வழங்கப்பட வேண்டுமென போரணி

March 20, 2026

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என கோரிய போரணி ஒன்று நேற்று(19)

arj

அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

March 20, 2026

கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா