ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதோடு, 04 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் எனவும், அவர்களில் சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் எனவும் ஸ்பானிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பார்சிலோனா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஓசோனா மாவட்டத்தில், சுமார் 21,000 பேர் வசிக்கும் மான்லூ பகுதியில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தின் சேமிப்பு அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து மொசோஸ் டி எஸ்குவாட்ரா எனப்படும் காடலான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.