சென்னை:
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகு அடிக்கல்லில் இருந்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பெயர் நீக்கப்பட்டதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தில், தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டப் பார்ப்பதாக தி.மு.க. தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
இதுவரை 50 நாட்களில் எந்தவொரு புதிய திட்டத்தையும் தவெக அரசு கொண்டு வரவில்லை என்றும், முன்னாள் அரசின் திட்டங்களை முடக்கவே முயற்சிப்பதாகவும் தி.மு.க. விமர்சித்துள்ளது. கல்வெட்டை அகற்றியது தவெக அரசின் பயபீதியையே காட்டுவதாக தி.மு.க. கூறியுள்ளது. தமிழக அரசியல் களத்தில், திட்டங்களுக்குச் சொந்தம் கொண்டாடுவதிலும் பெயர்களை நீக்குவதிலும் தவெக மற்றும் தி.மு.க. இடையே மோதல் வலுத்துள்ளது.
#DMK #Stalin #Tvk #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #PoliticalDispute #Politics2026 #PoliticalCriticism #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash