வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ இன்று(12.02.2026) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி – இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள குளத்தை பார்வையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காக்கா கடைச் சந்தியிலுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டுள்ளதுடன், குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு செயற்பாடுகளை விவேகானந்த நகர் பகுதியையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.