வீரவில, கங்கசிறிகம பகுதியில் நபர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ள நிலையில், அந்தத் தீ அருகில் உள்ள ஏனைய வயல் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க முயன்றுள்ளார்.
அவர் தீயில் சிக்கிப் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகத் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் மார்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.