அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவில் வேலை அனுமதிக்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாக குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியேற்றக் கொள்கை சீரமைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடைக்கலம் கோருபவர்கள், அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் உட்பட பல புலம்பெயர்ந்த குழுக்களுக்கான குடியேற்ற விதிகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி ஆவணங்களின் (இ.ஏ.டி) செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.