இரத்மலானை – கொளுமடம சந்தியில், வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.