ஜனநாயகன் திரைப்படத்தின் சிங்கிள் பாடலை விஜய்யிடம் படக்குழு போட்டு காண்பித்துள்ளனர். பாடலை கேட்டுவிட்டு விஜய் சொன்ன விஷயம் பற்றிய தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது.
விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் ரசிகர்களுக்காக வெளியாகவுள்ளது. தீபாவளியை முன்னிட்டே ஜனநாயகன் பாடல் வெளியாகவிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்போது இப்படத்தின் பாடல் வெளியாகாமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து நவம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு உள்ளதாம். மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் முன்பை விட தற்போது வேகமெடுத்திருப்பதாக தெரிகின்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜனநாயகன் பட பாடலை விஜய்யுடன் போட்டு காட்டியதாகவும், அப்பாடல் விஜய்க்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.