வெள்ள அனர்த்த பாதிப்பு: கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக்கொடுப்பனவு மற்றும் ரூபா 25000 கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (09.12.2025) பிரதேச செயலாளர்களுடன் நிகழ்நிலை ஊடாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் பின்வரும் விடயங்களும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

1.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் வரவு செலவு திட்ட சுற்றறிக்கை 08/2025 என்பவற்றின் பிரகாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கு போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரகாரம் கொடுப்பனவினை வழங்கல்.

4.குறித்த கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைக்கு அமைய, கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் உரிய படிவத்தினை நிரப்பிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு கிராம மட்ட அலுவலர்களோ பிரதேச செயலாளர்கள்களோ காலநீடிப்பனை மேற்கொள்ள வேண்டியதில்லை.

5.வீட்டு உரிமை இல்லாதவர்களுக்கும் தற்போது வசிக்கும் பிரிவுக்குரிய குடும்ப பதிவு அட்டை இல்லாதவர்களுக்கும் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தலுடன் கொடுப்பனவு வழங்கலாம்.

6.வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபா 25000.00 கொடுப்பனவு மற்றும் உலர் உணவுகள் வழங்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலை நாளை முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

7.தகுதியானவர்களின் பட்டியல்களை காட்சிப்படுத்திய பின்னர் காலதாமதம் இன்றி உரிய வங்கி கணக்கிற்கு விரைவாக வைப்பிலிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் அறிவுறுத்தியதுடன், மேலும், ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் நேரடியாக மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் .இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆ. நளாயினி மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

sa

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

December 10, 2025

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த

tn

பரந்தன் – முல்லைத்தீவு பாலம் புனரமைப்பைப் பார்வையிட்ட இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி!

December 10, 2025

பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய

aji ca

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றமற்றவர் – நீதிமன்றம்

December 10, 2025

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என

pra

வெள்ள அனர்த்த பாதிப்பு: கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்பு

December 10, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக்கொடுப்பனவு மற்றும் ரூபா 25000 கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு

vi

த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை – பிரவீன் சக்கரவர்த்தி

December 10, 2025

“த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை,” என, காங்கிரஸ் கட்சியின் தரவு

indi

9 வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

December 10, 2025

பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து

nayina

திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்

December 10, 2025

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

rag

ராகுல் காந்தியை பா.ஜ கடும் விமர்சனம்

December 10, 2025

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை பாஜ கடுமையாக

pann

சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்

December 10, 2025

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர்

am

அம்பாறை மக்களால் நுவரெலியா மக்களுக்கு நிவாரணம்

December 10, 2025

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அம்பாறை மாவட்டம் தம்பட்டை, தம்பிலுவில்,

not

பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம்

December 10, 2025

ஹட்டன் – நோர்டன் பிரதான வீதிப் பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ

ka

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்தவர் உயிரிழப்பு!

December 10, 2025

‘நெடுந்தாரகை’ பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.