வெள்ளம் காரணமாக 38 எரிபொருள் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த எண்ணிக்கை 24 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் அவசரகால பேரிடர் காரணமாக மின்சாரத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போது இந்தக் கருத்தை வெளியிட்டார்.