வெள்ளத்தில் மூழ்கிய களஞ்சியசாலைகள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும்

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? சிலர் காப்புறுதி செய்துள்ள போதிலும், துரதிஷ்டவசமாக காப்புறுதி திட்டங்களை செய்யவில்லை. சில காப்புறுதி நிறுவனங்களின் கொள்கைககளில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். ஆனால் இவ்வாறான துறைகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கை கொடுத்தால், அரசாங்கத்துக்கு அந்த சுமையை ஏற்க வேண்டியேற்படாது. எனினும் காப்புறுதி நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இதுவரை காப்புறுதி நிறுவனங்களுக்கு 37 பில்லியன் வரையாக கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தொகையை காப்புறுதி நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பது அடுத்த பிரச்சினையாகும்.

காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு எவ்வாறு எந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்த தொழிற்துறையினருக்கு இழப்பீட்டுடன் மிகக் குறைந்த வட்டியில் 10 இலட்சம் வரையில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படும். திறைசேரியில் போதுமானளவு நிதி காணப்படுகிறது. எனவே நிதி பற்றாக்குறை எனக் கூடி இதனை தட்டிக்கழிக்க முடியாது.

தற்போது பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான யோசனை முன்வைக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு சிறிய அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1400 மில்லியனையும் இதற்காகப் பயன்படுத்த முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை காணப்படுகின்ற போதிலும், இந்த திடீர் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அதிலும் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே நாணய நிதியத்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்