வெற்றிப் பாதையில் செல்லும் இலங்கை – IMF புகழாரம்!

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கொசெக் மேலும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் விரிவான சீர்திருத்தத் திட்டம் பற்றி நான் கூறக்கூடியது என்னவென்றால், அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ள நிலையில், அரசாங்க வருவாய் வசூலிப்பு மேம்பட்டு வருகிறது.

சர்வதேச இருப்புகளும் அதிகரித்து வருகின்றன. 2024க்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

வரவு-செலவுத் திட்டத்தின் வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 2022இல் 8.2%இலிருந்து 13.5% ஆக மேம்பட்டுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை அநேகமாகப் பூரணமாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, திட்டத்தின் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதாகக் கூற முடியும். விரிவான நிதித் திட்டத்தின் நோக்கங்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூற முடியும்.

விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த, எங்கள் குழு தற்போது இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது. அதன்படி, ஐந்தாவது மதிப்பாய்வின் காலப்பகுதி குறித்து எதிர்காலத்தில் எமது குழு அறிவிக்கும்” என்று அவர் கூறினார்.

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்