வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று(13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும்.

பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து ‘வெப்ப அதிர்ச்சி’ (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

4556

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

March 14, 2026

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” –

fue

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் புதிய செய்தி

March 14, 2026

உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும்

45

கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள்

March 14, 2026

ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக

xa

மொன்ரியல் நகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; வன்கூவரில் ஒரு பெண்ணைக் குத்திக்கொன்றவர்?

March 14, 2026

வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur

chaco

மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

March 14, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை

d

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

March 14, 2026

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக

heat

வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

March 14, 2026

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு,

Sri

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது – சிறீதரன்  எம்.பி

March 14, 2026

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக்

plas

கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பின் நால்வர் உயிரிழப்பு – சுகாதார அமைப்பு தகவல்

March 14, 2026

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில்

Parliament

17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

March 14, 2026

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி

c

அமெரிக்காவின் முடிவால் சீனா கடும் அதிருப்தி

March 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, தாய்வானுக்குப் புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை

Thala

தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

March 14, 2026

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்