வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து அவருடைய டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் எஸ்கே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எஸ்கே, வெங்கட் பிரபு காம்போவில் உருவாகும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையில் தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளார் எஸ்கே. வெங்கட் பிரபு டைரக்ஷனில் அவருடைய அடுத்தப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் காம்போவில் உருவாகும் படம் பற்றி புதிய புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவ், மீசை இல்லாத லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு படத்தில் இந்த தோற்றத்தில் தான் எஸ்கே நடிக்கவிருக்கிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய இந்த லேட்டஸ்ட் லுக் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
பராசக்தி படத்துக்கு பின்பாக எஸ்கேவின் லைன்அப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இருந்தனர். இவர்கள் இருவருமே எஸ்கேவின் கால்ஷீட்டுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் படம் தள்ளிப்போவதால், அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றவாறு இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. விஜய்யின் ‘கோட்’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்துக்காக எஸ்கேவுடன் கூட்டணி அமைத்துள்ளார் வெங்கட் பிரபு. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் கலந்த டைம் டிராவல் படமாக ‘எஸ்கே 26’ உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.