வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்ணொருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

களுபோவில – தெஹிவளை வீதியில், களுபோவில பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதலாவது கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தெஹிவளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வேறு வீதிக்குத் திருப்ப முற்பட்ட போது, எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். இது தொடர்பில் கொஹுவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, மதவாச்சி – கெப்பித்திகொல்லேவ வீதியின் ஹீரல்லுகம பிரதேசத்தில், ஹீரல்லுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆண் ஓட்டுநர் ஒருவரும், பெண் ஓட்டுநர் ஒருவரும் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பின்னால் பயணித்த இருவருமாக நால்வர் பலத்த காயமடைந்து கெப்பித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பெற்று வந்த பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எடவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணாவார். இது தொடர்பில் எடவீரகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்

n

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு பிரதம நீதியரசர் விஜயம்

March 3, 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.