முச்சக்கரவண்டியும், லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கேகாலையில் மாவனெல்ல – ஹெம்மாத்தகம வீதியில் 9 ஆவது கிலோ மீற்றர் மைல்கல்லுக்கு அருகில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
ஹெம்மாத்தகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் இரண்டு பெண் பயணிகள் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள ஹெம்மாத்தகம பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.