அமெரிக்கா தலைமையிலான “விதிகளுக்கு உட்பட்ட உலக ஒழுங்கு” தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) உரையாற்றிய போதே, அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகம் இப்போது ஒரு “பெரிய விரிசலை” சந்தித்து வருவதாகவும், பழைய காலத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பது எந்தப் பலனையும் தராது என்றும் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்தார்.
வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், கனடா போன்ற நடுத்தர நாடுகள் (Middle Powers) ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மார்க் கார்னியின் உரையின் மையக்கருத்தாகும்.
கடந்த 80 ஆண்டுகளில் கனடா மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கைகளில் இதுவே மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.