2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நாளை ( 25) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைக் முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை இரவு 7:00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொழும்பு போக்குவரத்துப் பொலிஸாரால் பின்வரும் நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
ஆர்.பிரேமதாச மைதானத்தைச் சுற்றியுள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக பின்வரும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன:
கோவில் வீதி, ஆப்பிள்வத்தை மற்றும் 100 அடி வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்த முடியும்.
ரசிகர்களின் பாதுகாப்பிற்காக சீருடை அணிந்த பொலிஸாரும், சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் மைதானத்திற்குள் நுழையும் போது பின்வரும் பொருட்கள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது:
மைதானத்திற்குள் நுழையும் போது சிசிடிவி அவதானிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகனச் சோதனை என்பன இடம்பெறும் என்பதால், பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.