விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் டிசம்பர் மாதம் LIK என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தை தயாரிப்பாளர் லலித் பார்த்துவிட்டு தில்லான ஒரு முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியிருக்கும் LIK திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஒரு சில முறை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாக டிசம்பர் 18 ஆம் தேதி இப்படம் கண்டிப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் 18 ஆம் தேதியும் இப்படம் வெளியாகுமா ? என்பது சந்தேகம் தான் என சிலர் கூறி வருகின்றனர்.
அதற்கு காரணம் இப்படத்தின் OTT உரிமை இன்னும் விற்கப்படாதது தான். சமீபகாலமாக OTT நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு 12 படங்களை தான் வாங்குவோம் என்ற முடிவை எடுத்திருக்கின்றதாம். இதனால் பல பெரிய படங்களின் OTT உரிமை விற்கப்படுவதிலும் சிக்கல் எழுந்திருக்கிறது. அந்த லிஸ்டில் LIK திரைப்படமும் இணைந்துவிட்டதாக தெரிகின்றது.