வாயில்லா ஜீவன்களை துஷ்பிரயோகப்படுத்திக் கொலைசெய்து வந்த கனடா தம்பதி!

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

‘Goddess May Barefoot Premium Crush’ என்ற பெயரில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும் பகிரப்பட்டதாகவும் அரச குற்றவியல் சட்டத்தரணி பாய்ட் மெக்கில் வினிபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் மெக்கில் கூறினார்.

இந்தக் காணொளிகள் ‘டார்க் வெப்’பில் வெளியிடப்பட்டதாகவும், விலங்குகளைக் கொல்வதற்கான விலைப் பட்டியலும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் ஒரு சிறிய எலிக்கு 5 டொலர் முதல் மூன்று பூனைக் குட்டிகள் கொண்ட குடும்பத்திற்கு 180 டொலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குற்றவாளிகள் இருவரும் தலா ஆறு விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட லிமாவின் நாட்குறிப்பில், “தனது கால்களால் உயிர்களைக் கொல்வது எவ்வளவு பிடிக்கும், அது தனக்கு அளிக்கும் இன்பம்” குறித்தும் எழுதப்பட்டிருந்தது.

மே 2024 முதல் ஒக்டோபர் 2024 வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

தம்பதிகள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்படும் முந்தைய தண்டனை அறிக்கைகள் முடிவடைந்த பிறகு, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து

gaza

அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

November 17, 2025

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா

cri

68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

November 17, 2025

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2

fo

வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

November 17, 2025

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும்

Death-2

விபத்தில் யாசகர் பலி

November 17, 2025

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி,

puth

சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

November 17, 2025

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

ol

கைவிடப்படும் நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தம்!

November 17, 2025

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை இந்தியாவுடன் கூட்டிணைந்து புதுப்பித்தல் மற்றும் மீளமைத்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை

ve

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கையர்; தவிக்கும் மனைவி, பிள்ளைகள்

November 17, 2025

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின்

arrest

டோனி கைது

November 17, 2025

தெகிவளை, கல்கிஸ்ஸ தொகுதியின் JVP – NPP அமைப்பாளரும் வேட்பாளருமான (குடு/தூள்) போதை கடத்தல் வியாபாரி டோனியை போதைவஸ்து தடுப்பு

Jinthu

இலவச மருத்துவ முகாம்

November 17, 2025

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று

ga

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

November 17, 2025

கொழும்பு – காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர்