தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஏயார் கனடா (Air Canada) நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கனடா உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஏயார் கனடா விமானப் பயணச்சீட்டு விலைகளை இணையதளத்தில் அதிக விலையில் கட்டணங்களைக் காண்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மைக்கேல் சைலாஸ் என்பவர் ஏயார் கனடா இணையதளத்தில் காட்டிய விலையை விட தான் பயணச்சீட்டு வாங்கும் போது 124 டொலர் கூடுதலாக வழங்கியதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு சேவையின் முழு விலையையும் ஆரம்பத்திலேயே நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த விதியை ஏயார் கனடா நிறுவனம் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.