அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடாத்தப்பட உள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், பொது அமைப்புகள் உடனான கலந்துரையாடல் ஒன்றினை தமிழ் கட்சிகள் 26 ஆம் திகதி தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.