வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று(8.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது 4 இளைஞர்களிடமிருந்து 500போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.