வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும்

நிலக்கரி கொள்வனவு மோசடிக்கு காரணமான வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால், அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதன் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமையாமல் இதுவரை இலங்கை மின்சாரசபைக்கு 7.6 பில்லியன ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபை தெரிவித்திருக்கிறது.

நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்கோரளின் பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை மிகவும் திட்டமிட்டு மாற்றியமைத்து, அரசாங்கம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. நலக்கரி தொடர்பில் எந்தவித அனுபவமும் இல்லாத நிறுவனத்துக்கே அரசாங்கம் இதனை வழங்கி இருக்கிறது.

தற்போது இந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் இருக்கும் பிரதான நிபந்தனைகளை மீறி இருக்கிறது.இவ்வாறு நிபந்தனைகளை மீறி இருக்கும்போது, அரசாங்கததுக்கு அந்த விலை மனுக்கோரலை ரத்துச்செயலாம். ஆனால் அரசாங்கம் எந்வகையிலும் அதனை ரத்துச்செய்யாமல் தொடர்ச்சியாக அந்த நிறுவனத்தில் இருந்தே நிலக்கரியை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதை காணக்கூடியதக இருக்கிறது.

நிலக்கரி மோசடி தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணைை ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மிக விரைவாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம். அத்துடன் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். அவ்வாறு ஜனாதிபதி இந்த அமைச்சரவை நீக்காவிட்டால், அரசாங்கம் இந்த மோசடியை மறைப்பதற்கே முயற்சிக்கிறது.

ஆனால் அரசாங்கம் என்னதான் இந்த மோசடியை மறைப்பதற்கு முயற்சித்தாலும், அது இரப்பர் பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்த முயற்சித்தாலும் அது மீண்டும் மிதப்பதுபோன்று. இந்த நிலக்கரி மோசடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஏனெனில் இதுவரை 9 நிலக்கரி அடங்கிய கப்பல்கள் வந்துள்ளன. அந்த ஒன்பதிலும் தரம்குறைந்த நிலக்கரி இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாரிய மோசடியாகும். அதற்கு அடுத்தபடியாக கொள்கலன் மோசடி இருக்கிறது. இவ்வாறு பல மோசடிகள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன.

அதனால் ஜனாதிபதி வலுசக்தி அமைச்சரை பதவி விலகுமாறு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால், அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதன் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அத்துடன் அனைத்து விடயங்களையும் வெளிப்படையாக மேற்கொள்வதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் எதனையும் வழங்குவதில்லை. அதேநேரம் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தேவையான ஒதுக்கீடுகள், மனித வளங்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்காமல் அதனை செயலிழக்கச்செய்ய அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

அதேநேரம் அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தால் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள நட்டத்தை, நூற்றுக்கு 13வீத மின்சார கட்டணத்தை அதிகரித்து, அதனை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்கு தோன்றுகிறது என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு