யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். நீதவான் நீதிமன்றில் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டுள்ள நிலைமையில் அவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ். நீதவான் நீதிமன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, இணைய வழியில் சாட்சியம் அளிக்க தயார் என மன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.