வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை;’சுப்பர் முஸ்லிம்’ அமைப்பின் தலைவர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பின் தலைவர் கலாநிதி கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் எனது பெயர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, ஒரு சுருக்கமான மற்றும் பொறுப்பான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்.

நான் எந்தவித வன்முறை, தீவிரவாத அல்லது சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதையும், பயங்கரவாதம் தொடர்பான எந்தக் குற்றச்சாட்டிலும் எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டதோ இல்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளிப்படையான சில உண்மைத் தவறுகள் காணப்படுகின்றன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள “Super Muslim” என்ற பெயரில் இலங்கையில் எந்தவொரு அமைப்பும் இல்லை. “சஹாபி தரீகா” என்ற சொல், நபியவர்களின் தோழர்களான சஹாபாக்களின் வழிமுறையை மட்டுமே குறிக்கிறது. இது ஒரு அமைப்போ அல்லது தீவிரவாதக் குழுவோ அல்ல; மாறாக இது பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களிலும் தவறுகள் உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் ஒன்று எனக்குச் சொந்தமானதல்ல. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் அல்லது ஒன்லைன் இணைப்புடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் அல்லது அறிவும் இல்லை. இவ்வாறான தவறுகள் தீவிரமாகக் கவலைக்குரியவையாகும்.

இந்த நிலைமை தவறான தகவல்கள் அல்லது ஆள் அடையாளக் குழப்பம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட எந்தச் செயல்பாட்டினாலும் ஏற்பட்டதல்ல. இந்த விடயம் எனது நற்பெயருக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நான் முறையான சட்ட நடைமுறைகளின் மூலம் சட்ட நிவாரணங்களை நாடியுள்ளேன். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையான மனுக்களைச் சமர்ப்பித்துள்ளேன்.

நான் நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பையும், இலங்கை நீதித்துறையையும் முழுமையாக மதிக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எனது விளக்கங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து, அதன் தீர்ப்பை மரியாதையுடன் எதிர்பார்க்க உள்ளேன்.

ஆகவே, தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்து, சட்ட நடைமுறைகளுக்கு மரியாதை செலுத்துமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய