2026 வரவு -செலவுத் திட்ட (பட்ஜெட்) முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு
2026 வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை (05) இரவு இணைந்துகொண்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இதில் கலந்து கொண்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு -செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை வௌ்ளிக்கிழமை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.