வனஇலாகா என்பது எமது மக்களின் காணிகளைத் அபகரிக்கும் திருட்டுக் குழு – ரவிகரன் எம்.பி சாடல்

வனவளத் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு திருட்டுக்குழுவென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
அத்தோடு வனவளத்திணைக்களத்தின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அபிவிருத்திக்குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா – செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03.09.2026இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக தொல்லியல்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இவற்றின் வரிசையில் வனவளத் திணைக்களமும் எமது மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபடுகின்ற ஒருதிணைக்களமாகும்.
இவ்வாறு மக்களின் காணிகளை மும்முரமாக அபகரிக்கின்றதிணைக்களங்களே ஆளும் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆப்புவைக்கின்ற செயற்பாட்டைச் செய்யும் என பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும், வன்னிமாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றோம்.
இந்நிலையில் கடந்த 01.09.2026அன்று இடம்பெற்ற வவுனியா நகர் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும், ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருப்தை வரவேற்கின்றோம்.
குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் நிலஅபகரிப்பின் தீவிரத் தன்மையை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முல்லைத்தீவில் கடந்ககாலத்தில் 2,22006 ஏக்கர் அடர்ந்த காடுகளே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு முல்லைத்தீவில் 4,32141ஏக்கர் நிலங்கள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறாக வனவளத் திணைக்களம் எமது மக்களின் காணிகளில் அத்துமீறி எல்லைக் கற்களையிட்டு ஆக்கிரமிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மக்களின் நெற்செய்கைக் காணிகளும், உபஉணவுப் பயிற்செய்கைக் காணிகளும் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டால் அந்தக் காணிகளுக்குரிய விவசாயிகள் என்னசெய்வது.
எனவே வனவளத் திணைக்களத்தின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.
எமது மக்கள் மண்வெட்டிபிடிக்காக சிறிய மரங்களை வெட்டும்போது, அவர்களுக்கெதிராக வனவளத் திணைக்களம் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அதேவேளை கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பாரிய வனப்பகுதிகளை அழிப்பதற்கு வனவளத்திணைக்களம் ஆதரவாகச் செயற்படுவதாகவும் எமக்கு மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
எனவே இந்தவிடயங்கள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது வன்னிப் பிராந்தியத்தைக் காப்பாற்றுங்கள் என்றே நாம் கோருகின்றோம்.
வனவளத்திணைக்களத்திற்கு மக்களின் காணிகள் எதற்கு? எமது விவசாயிகளின் காணிகளை அவர்களிடமே வழங்குங்கள்.
வனவளத் திணைத்தினரா விவசாயம் செய்கின்றனர்? எமது மக்கள் தமது காணிகளில் விவசாயத்தை மேற்கொண்டு அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துங்கள்.
வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக அண்மையில் எதிர்ப்பு வெளியிட்டதைப்போன்று, வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கெதிரான நடவடிக்கைகளை செயலிலும் காண்பியுங்கள்.
வனவளத்திணைக்களம் மக்களின் காணிகளைத் திருடும் திருட்டுக்கூட்டம் எனவும் தெரிவித்தார்
dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை