வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா ?

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா என்று பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகளவான இடங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற போதிலும் நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் மட்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவில்லை

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் எம்பி தன்னுடைய முகநூலில் கடந்த 23ஆம் திகதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெறுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிற்போட பட்டிருப்பதாக அதே முகநூலில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் அறிந்திருக்கவில்லை. அதன் பின்புதான் முகநூலில் டிசிசி மீட்டிங் திகதி மாற்றப்பட்டிருப்பதாக ரஜீவன் எம்பி தெரிவித்திருந்தார்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறுவதற்கு முன்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற வேண்டும் அவ்வாறு இடம்பெற்றால் தான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் கலந்து ஆலோசிக்க முடியும் நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறாமை கவலையளிக்கின்றது.

வடமராட்சி கிழக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல்வேறு காணப்படுகின்றன. இவர்கள் திட்டமிட்டு எங்களுடைய வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை புறக்கணிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருகின்ற ஆண்டு பல காப்பெட் வீதிகள் யாழ். மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட போதும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு எந்த ஒரு காப்பெட் வீதியும் ஒதுக்கப்படவில்லை. வடமராட்சி கிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் இவ்வாறு அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்தாது விடுவது திட்டமிட்டு எங்களுடைய மக்களை புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகும்.

எதிர்காலத்தில் இந்த தவறுகளை இவர்கள் கவனத்தில் கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இவ்வாறான ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நிச்சயம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.