வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று புதன்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் பல பிரச்சனைகளையும் கொண்டதும், அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமாக வடமராட்சி கிழக்கு காணப்படுகின்றது. இவ் பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை செய்யவேண்டிய கடமையில் நாம் உள்ளோம்.
முக்கியமாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது பணியினை ஒழுங்காக செய்வது இல்லை மற்றும் பரீட்சை காலங்களில் பேரூந்துகள் இடையில் பழுதடைந்து நிற்பது போன்ற செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது
இதற்கான தீர்வினை வெகுவிரைவில் நாம் எடுப்போம். அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இவ் பிரதேசத்தில் அதிகளவான தொழில் முனைவோர்களை கொண்டு வந்து இப் பிரதேசத்தின் அபிவிருத்தியை ஊக்குவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.