வடமராட்சி கிழக்கு-நாகர் கோவில் பகுதியில் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர் பக்கச்சார்பாக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.
இந்தக் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும் சில பாதிக்கப்பட்ட வீடுகளை இது வரைக்கும் கிராம உத்தியோகத்தர் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மற்றும் தமக்கு இதுவரை எந்த நிவாரண பொதிகளும் கிடைக்கவில்லை எனவும் தாம் முழுமையாக வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, இதுவரைக்கும் தமது இல்லத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும் தாம் அன்றாட வாழ்வில் சமையல் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் உள்ளதாகவும் மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் ஆளும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு நிற்கின்றனர்.