யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது.
அண்மையில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிக காற்று வீசியிருந்தது.
இதன் காரணமாக வெள்ள நீருடன் குப்பைகள் வீதிகள் மற்றும் குடிமனைகளுக்குள் அடித்துவரப்பட்டு குப்பைக்காடாக காணப்படுகின்றது.
வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதியில் பயணிக்க முடியாத நிலையில் குப்பைகள் தேங்கியுள்ளது.
இதனால் அருகில் வசிக்கும் குடும்பங்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.