வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் நாகப்பட்டினம சோதிநாதன்
தலமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் விருந்தினர்கள் வரவேற்க்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பஞ்சபுராணம் ஓதுதல், வரவேற்பு நடனம், வரவேற்புரை தலமையுரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.
தொடர்ந்து விருதுகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி லலீசன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வடக்கு பிரதி பிரதேச செயலர் திரு.தயானந்தன், ஆகியோர் பௌராணிகர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
இதில் கச்சியப்ப சிவாசாரியார் விருதுகளை பௌராணிகர் சிவசிறி ராம் சபாநாதக் குருக்கள் அவர்களுக்கும், பௌராணிகர் இராமநாதன் செல்வவிநாயகம் அவர்களுக்கும், பௌராணிர் கிருஷ்ணசாமி பஞ்சலிங்கம் அவர்களுக்கும், ஆறுமுகம் நவரத்தினசாமி அவர்களுக்கும், வழங்கிவைக்கப்பட்துடன் சைவத்தமிழ் நாயகி விருதினை திருமதி தர்மலிங்கம் செல்வசோதி அவர்களுக்கும்,ந பஞ்சபுராண வித்தகி விருதினை பௌராணிகள் திருமதி சி.சிவஞானாம்பிகை அவர்களுக்கும், புராண பரன பாதுகாவலன் விருதுகளை பௌராணிகர் கணேசமூர்த்தி புலேந்திரன், நாகதம்பி குமரேசு அவர்களுக்கும், வழங்கிவைக்கப்பட்துடன் கந்தபுராண காதலன் எனும் விருதினை ஜெ.ஜெயமனோகரன் அவர்களுக்கும், பஞ்சபுராண பாதுகாவலன் விருதினை பௌராணிகர் சிவபாதம் தங்கமயில் அவர்களுக்கும், கந்தபுராண காதலி விருதினை பௌராணிகர் திருமதி தங்கராசா தமிழரசு அவர்களுக்கும், சைவத்தமிழ் நாயகி விருதினை திருமதி ராதா குலோத்துங்கன் அவர்களுக்கும், கந்தபுராண காதலன் விருதினை தர்மலிங்கம் ரவீந்திரராசா அவர்களுக்கும், வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துரைகளை மூத்த பௌராணிகர் சபாரத்தினம் விநாயமூர்த்தி, ஞானபண்டித ஆன்மீக வித்தகர் ஆ.சிவநாதன், யாழ் கம்பன் கழக செயலாளர் தவராசா கருணாகரன், ஆவணக்காப்பக உரிமையாளர் சிவகடாட்சம் செந்தூரன் ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையினை வடமராட்சி வடக்கு பிரதேச பிரதி பிரதேச செயலர் திரு தயானந்தன், அவர்களும், பிரதம உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும், நிகழ்வின் பிரதம விருந்தினருமான செந்தமிழ் சொல்லருவி லலீசன் அவர்களும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் வடமராட்சி வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த ஆன்மீக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.