வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பான துறைசார் வல்லுநர்களின் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

வட மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் வரவு பாடநீதியாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக முன் பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதேச நீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேச சபையினருடன் கலந்துரையாடி மாதிரி முன்பள்ளி ஒன்றினை நிபுணத்துவத்துடன் பயிற்சி வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நகரப்புற பாடசாலைகளுக்கு மாணவர்கள் அதிகம் செல்வதால் கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பதற்கு நகர் புற பாடசாலைகளில் வகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை மட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வட மாகாண கல்வியை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் வடமாக ஆளுநருடன் எதிர் வரும் வாரங்களில் சந்திப்பதாக குறித்த காலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சொன்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர் ராஜா, வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், வட மாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர்களான உதயகுமார் மற்றும் ஜோன் குயின்ரஸ், எதிரி சூரிய சேகரம், கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர் சச்சிதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த