வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரத்தை ஆராய்கிறது சகலரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கான கூட்டிணைவு அமைப்பு

வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரத்தையும், அப்பிராந்தியங்களின் இயங்குகையையும் புரிந்துகொள்ளும் நோக்கில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல்வாதிகள் 16 பேர் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் சனிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானநிலையத்தைப் பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றனர்.

வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார இயங்குகையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 இளம் அரசியல் தலைவர்கள் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

“கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட்“ (சகலரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கான கூட்டிணைவு) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (31) புறப்பட்ட இக்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சித்ரால் பெர்னாண்டோ, அமில பிரசாத் சிறிவர்தன, சமிந்த்ரனி கிரியெல்ல, சத்துர கலபத்தி ஆகியோரும், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் எம்.ஐ.மொஹமட் ஆத்தீஃப்பும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் காசிலிங்கம் கீத்நாத், மிலிந்த ராஜபக்ஷ, சமன்பிரிய ஹேரத் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பியன் குருகேவும், பிவிதுரு ஹெல உறுமய சார்பில் அஞ்சன உதாரவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கனிஷ்டா மைக்கேலும், சர்வ ஜன சக்தி சார்பில் ராஜித ஹப்புஆராச்சியும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் எம்.சந்திரகுமாரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஏ.ஆர்.மொஹமட் அஸ்மியும், இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் நிதன்ஷன் மற்றும் மயூரன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

வடக்கின் நிலைவரம் மற்றும் உண்மைகள் தொடர்பில் நேரடியாக அறியாத கொழும்பு அரசியல்வாதிகள் நல்லிணக்கம், காணி உரிமை, பொருளாதார உள்ளீர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேசிய ரீதியில் இடம்பெற்றுவரும் வா, பிரதிவாதங்கள் குறித்து விரிவாகப் புரிந்துகொள்வதற்குப் பங்களிப்புச் செய்வதே இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

அதன்படி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த மேற்படி குழுவினருக்கு அங்குள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தினால் யாழ் கலாசார நிலையத்தில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.

அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இரா.சாணக்கியன் ஆகியோரும் இணைந்து மேற்படி அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் வடமாகாண மற்றும் உள்ளுராட்சிமன்றங்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அங்கு உள்ளுராட்சிமன்ற நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினைகள், அதிகாரப்பகிர்வு, அரச சேவைகளுக்கான பிரஜைகளின் அணுகல், பொலிஸ் அராஜகம் மற்றும் கண்காணிப்பு, பிராந்திய இணைப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணம் மேற்கொண்ட அக்குழுவினர், காங்கேசன்துறை துறைமுகத்தையும் பலாலி விமானநிலையத்தையும் சென்று பார்வையிட்டனர். அதுமாத்திரமன்றி துறைமுக மற்றும் விமானநிலைய அதிகாரிகளால் அவற்றின் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த