வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார்.

சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், “நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது” என்று எச்சரித்தார்.

இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது.

ont

நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

March 14, 2026

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு

55

கனடா – அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை

ano

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மத்திய கிழக்குச் சூழ்நிலை மாறியுள்ளது!

March 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை

mett

தொழில்நுட்ப மாற்றங்களால் மெட்டாவில் 20 வீத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு?

March 14, 2026

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20

nor

வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

March 14, 2026

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய

med

“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிப்பு

March 14, 2026

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft)

f

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சுற்று நிரூபத்தில் விரைவில் மாற்றம்

March 14, 2026

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று

vimal

நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார் – விமல் வீரவன்ச கிண்டல்

March 14, 2026

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள்

arres

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

March 14, 2026

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை

no

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு; விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

March 14, 2026

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

ic

லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி

March 14, 2026

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்

ddd

பேராதனை பால நிர்மாணப் பணிகள்

March 14, 2026

பேராதனை ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய