லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு

லக்விஜய மின்நிலையத்திற்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசேட தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு நிலக்கரி விநியோகிப்பதில் சர்ச்சைக்குரிய ‘ட்ரைடென்ட்’ நிறுவனத்தினால் ஏற்றுமதி துறைமுகத்தில் அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட ஆய்வகத்தின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட ஒன்று என கணக்காய்வாளர் நாயகம் இந்த விசேட தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழு அண்மையில் தேசிய தணிக்கை அலுவலகத்திற்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க கணக்காய்வாளர் நாயகம் இந்த அறிக்கையை வழங்கியுள்ளார். ஏலங்கள் கோரப்படுவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்ட திகதியில், ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ட்ரைடென்ட் நிறுவனம் தனது பதிவைக்கூட பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2025/2026 பருவத்திற்காக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்யும் போது, அந்த கொள்முதல் நடைமுறை மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லாமை குறித்து கணக்காய்வாளர் நாயகத்திடம் பொது நிறுவனங்கள் பற்றிய குழு அறிக்கை ஒன்றைக் கோரியிருந்தது.

அதற்கமைய, லக்விஜய மின்நிலையத்திற்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசேட தணிக்கை அறிக்கை தற்போது தேசிய தணிக்கை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கொள்முதல் நடைமுறையில், ஏலங்கள் கோரப்படுவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்ட திகதியில் பதிவை பூர்த்தி செய்த விநியோகஸ்தர்களிடமிருந்தே ஏலங்கள் கோரப்படும் என அந்த விளம்பரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தத் திகதி வரை முழுமையான பதிவுக்கட்டணத்தைச் செலுத்தி பதிவை உறுதிப்படுத்தாத மூன்று விநியோகஸ்தர்களுக்கும் ஏலங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த கொள்முதலுக்குத் தெரிவு செய்யப்பட்ட ட்ரைடென்ட் நிறுவனமும் அன்று வரை பதிவை உறுதிப்படுத்தியிருக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகம் அவதானித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி லக்விஜய மின்நிலையத்திற்குப் பொருத்தமான தரத்தைக் கொண்டுள்ளதா என்பது குறித்து ஏற்றுமதி துறைமுகத்திலும் இறக்குமதி துறைமுகத்திலும் சுயாதீன ஆய்வாளர் ஒருவரால் பரிசோதிக்கப்படும். இதன்போது ஏற்றுமதி துறைமுகத்தில் விற்பனையாளரால் நியமிக்கப்பட்ட ‘Mitra SK South Africa’ எனும் தாய் நிறுவனத்திற்கு தேவையான தரங்களுக்கு உட்பட்டு நிலக்கரி மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான அங்கீகாரம் இருக்கவில்லை. இதன் காரணமாக, அந்தப் பரிசோதனை அறிக்கையை வெளியிடும் பணி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதியளவில் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட ‘PT Mitra SK Analisa Testama Samarinda’ எனும் இந்தோனேசிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் 2026 மார்ச் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்டிருந்தமை குறித்து தணிக்கையின் போது தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற 12 கப்பல் தொகுதிகளுக்கும் உரிய ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், அங்கீகாரம் இல்லை என அடையாளம் காணப்பட்ட ‘Mitra SK South Africa’ தாய் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஏற்றுமதி துறைமுகத்தின் பரிசோதனை அறிக்கைகளுக்கும் லக்விஜய மின்நிலையத்தின் பிரதான கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள் குறித்து உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்குப் பல மாற்று வழிகள் இருந்தும் அவற்றில் எதனையும் பயன்படுத்த அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அதேபோல், ஆண்டு முழுவதும் இலங்கையில் நிலக்கரியை இறக்க முடியாது என்பதால், நிலக்கரியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய காலப்பகுதியில் அதனை அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். எனினும், அதற்கான வாய்ப்பு இருந்த 2025 நவம்பர் 13 முதல் டிசம்பர் 30 வரையான 40 நாட்களில் எவ்வித நிலக்கரி கப்பல்களையும் நாட்டுக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை நிலக்கரி நிறுவனம் தவறியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகக் கப்பல்கள் வந்தமையால், இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அவசர கொள்முதல் மூலம் நிலக்கரி கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட ‘Taranjot Resource’ தனியார் நிறுவனமும், தனது பதிவைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னரான 36 மாத காலப்பகுதியில், லக்விஜய மின்நிலையத்தின் மொத்த வெப்ப உற்பத்தி பெறுமதியின் நிராகரிக்கப்பட்ட மட்டமான 5,900 kcal/kg அல்லது அதற்கு மேல் வழங்கத் தவறிய ஒரு நிறுவனம் என்பதும் கணக்காய்வாளர் நாயகத்தினால் இந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலமைகளைக் கருத்திற் கொள்ளும் போது, உரிய காலத்திற்கு நிலக்கரி கப்பல்களைக் கொண்டுவர முடியாமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கட்டுப்பாடற்ற நிலைமைகளின் போது லக்விஜய மின்நிலையத்தின் தேவைக்கு நிலக்கரி போதுமானதாக இல்லாவிட்டால், அது தடையில்லா மின்சார விநியோகத்தைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும் என கணக்காய்வாளர் நாயகம் இந்த விசேட தணிக்கை அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்