ரஷ்யாவின் கருங்கடல் கரையில் அமைந்துள்ள துவாப்ஸ் துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் துறைமுகப் பகுதியும் அங்கிருந்த எண்ணை கப்பலும் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தாக்குதல் நடந்தவுடன் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், துறைமுக கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துவாப்ஸ் துறைமுகம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உலக சந்தைகளுக்கு அனுப்பும் முக்கிய மையமாகும்.
இந்த நிலையில், குறித்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.