காலி, உனவட்டுன – பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் பெருந்தொகைப் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில், அந்த விடுதி உரிமையாளரின் மகள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
குறித்த விடுதியில் தங்கியிருந்த ரஷ்யப் பயணிக்குச் சொந்தமான 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா (620,000) பணம் திருடப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், விடுதி உரிமையாளரின் மகளே இந்தப் பணத்தைத் திருடியுள்ளதை உறுதிப்படுத்தியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.