ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து மாநிலங்களவை எம்.பி.யான பி. வில்சன், “பாஜக அரசின்கீழ் தமிழகத்துக்கு 7.5 மடங்கு அதிக ரயில்வே நிதி கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் மீண்டும் கூறுகிறது.
ரயில்வே நிதியானது, ஆண்டுக்கு (2009 – 14) ரூ. 879 கோடியிலிருந்து 2025 – 26 ஆம் ஆண்டில் ரூ. 6,626 கோடியாக உயர்ந்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாட்டில் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
இந்தியாவின் மொத்த ரயில்வே பட்ஜெட் சராசரியாக (2009 – 14) ரூ. 10, 623 கோடியிலிருந்து, 2025 – 26 ஆம் ஆண்டில் ரூ. 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 25 மடங்கு அதிகரிப்பு.
ஆனால், இந்த 25 மடங்கு தேசிய அதிகரிப்புட ஒப்பிடும்போது, ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு மடங்கு உயர்ந்தது? என்பதுதான் கேள்வி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.