முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர நடவடிக்கை
அத்துடன், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவுக்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.