ரஜினிகாந்தின் ‘படையப்பா’ ரிட்டர்ன்ஸ்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆவது ஆண்டு பொன் விழா நிறைவு செய்வதால் அதனை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான நாளை டிசம்பர் 12 ஆம் திகதியன்று அவரது நடிப்பில் வெளியான ‘படையப்பா’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பட மாளிகையில் வெளியிடப்படுகிறது.

இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற ‘படையப்பா’ எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் ஆகியோருடன் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சத்ய நாராயணா – எம். வி. கிருஷ்ணா ராவ் – கே. விட்டல் பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் நாளை12 ஆம் திகதியன்று மீண்டும் படமாளிகையில் வெளியாகிறது. இது தொடர்பான பிரத்யேக காணொளி ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -கமல்ஹாசன்- விஜய் – அஜித் – ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தை ஈட்டி தருவதால்… திரைப்படங்களை மறு வெளியீடு செய்வது தற்போது பெசனாகி வருகிறது. அந்த வரிசையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ மீண்டும் வெளியாவதால் இந்த முறையும் வசூலில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.