எங்கள் அரோரா(Aurora) தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட 3 சத்தியப்பிரமாணம் செய்த உறுப்பினர்களையும் 8 பொதுச் சேவை நிபுணர்களையும் நாங்கள் வரவேற்றோம் என யோர்க் பிராந்திய காவல்துறை தனது லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அவர்களின் பதவி உயர்வுகள், சிறப்பான பணித்திறன், துணிச்சலான தலைமையியல், சேவைக்கு கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் சக உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் காட்டிய இரக்க உணர்வு ஆகியவற்றின் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை என்றும் இவர்கள் இனி குழுக்களை வழிநடத்தியும் வழிகாட்டியும், எமது அமைப்பை முன்னேற்றும் பணியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர் எனவும் யோர்க் பிராந்திய காவல்துறை தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.