யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து – சரத் வீரசேகர!

யுத்த வெற்றி அல்லது தோல்வியை அரசியல்வாதிகளே பொறுப்பேற்பார்கள். அவ்வாறெனில், இந்த யுத்தத்தை வெற்றி கொண்ட தற்கான முழு கெளரவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக் கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதாள குழுவினருக்கு தேவையின் அடிப்படையிலோ அல்லது தேவையற்ற வகையிலோ பிரபல்யத்தை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுத்தாலும், ஒவ்வொரு அரசாங்கங்களும் வெளிநாடுகளிலும் பாதாள குழு உறுப்பினர்களை கைதுசெய்துள்ளன. நான் பொது மக்கள் அமைச்சராக இருந்தபோதும் வெளிநாடுகளிலுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்நிலையில் இவ்வாறு செயற்பட்டால் தொடர்ந்தும் ஆட்சியிருக்கலாமென இந்த அரசாங்கம் கருதுகிறது. பாதாள குழு செயற்பாடுகளை முழுமையாக இல்லாமல் செய்து நாட்டில் அமைதியையும் மக்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது இந்த அரசாங்கத்தின் பொறு ப்பாகும். அதனாலேயே மக்கள் பெரும்பான்மை பலத்தைப் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. ஆகவே, எப்படியாவது இந்த அரசாங்கம் அவர்களின் கடமைகளை செய்யவேண்டும். அதனையே செய்து வருகிறார்கள். அதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இருந்தபோதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்தும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என்ற கருத்து பீல்ட் மார்சல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்ட கருத்தாகும். அதேபோன்று, குணமுடைய தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல மக்களும் நிராகரிக்கும் அறிவிப்பையே அவர் வெளியிட்டுள்ளார். எனவே, யுத்தத்தை வெற்றிக்கொள்வது அரசியல் வாதிகளே. யுத்தமொன்றின் வெற்றி மற்றும் தோல்வியின் பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்பார்கள்.

உதாரணமாக குறிப்பிடுவதானால் இரண்டாம் உலக யுத்தத்தை வின்சன் சேர்ச்சில் வென்றார். ஹிட்லர் தோல்வியுற்றார். ஜெனரல் மற்றும் அட்மிரல்களின் பெயர்கள் இரண்டாவதே கூறப்படும். 1987 ஆம் ஆண்டு வடமராட்சி சுற்றிவளைப்பின்போது ஜெனரல் கொப்பேகடுவ, ஜெனரல் விஜே குணரத்ன போன்ற தேசப்பற்று கொண்ட இராணுவ தலைவர்களின் தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஓரிரு நாட்களே இருந்தன. இருந்தபோதும் இந்தியாவிலிருந்து வந்து எமது ஆகாய பரப்பினூடாக பருப்பை வீசி எமது அரசாங்கத்தை பயங்கொள்ளச் செய்து அன்றிருந்த ஜனாதிபதி பயத்தினாலோ அல்லது அச்சத்தினாலோ யுத்தத்தை இடைநிறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் அன்றே போர் முடிவுக்கு வந்திருக்கும்.

அதேபோன்று, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தத்தை வெற்றிக்கொண்டோம். அதற்கு சில தினங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்த சிலர் யுத்தத்தை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கூறியிருந்தார்கள். அன்று யுத்தம் நிறுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் இன்றும் பயங்கரவாதம் இருந்திருக்கும். ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்துமாறு கூறியிருந்தால் இராணுவம் யுத்தத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்த யுத்த வெற்றி அல்லது வேறு எந்த யுத்தமாக இருந்தாலும் வெற்றி அல்லது தோல்வியை அரசியல்வாதிகளே பொறுப்பை ஏற்பார்கள். அவ்வாறெனில் இந்த யுத்தத்தை வெற்றிகொண்டதற்கான முழு கெளரவமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. அதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று கூறமாட்டேம். அமைதியாக வாழக் கூடிய சூழலை உருவாக்கி கொடுத்து உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்