யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு தெரிவித்தது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எமது ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு ஊடாக ஒழுங்கமைப்பு செய்துள்ளோம் என அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டி கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக அரசியலில் செயற்பட்டு வந்தேன்.அதனிலிருந்து முழுமையாக விடுபடுவது மட்டுமின்றி சிங்கள ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களை ஒருங்கிணைத்து செயற்ப முடியாத அளவுக்கு அரசியல் தடையாக இருப்பதானலும் இதனால் முழுமையாக செயற்பட முடியாது என்பதன் காரணத்தால் நான் அரசியலில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன்.

அரச பயங்கரவாத்த்தின் திட்டமிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்படும் வன்கொடுமைகள் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போதைப்பொருள் திணித்தல் போன்றவற்றை தடுப்பதை இலக்காக கொண்டு செயற்பட நான் செயற்பட்ட அரசியலினால் பல்வேறுபட்ட தடைகள் எனக்கு இருந்ததன் காரணத்தால் எனது வெளிப்படையான செயற்பாட்டை வடகிழக்கில் வாழும் ஆர்வமுள்ள பெண்களை இணைத்து ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பை கடந்த ஜனவரி 5 திகதி உருவாக்கியுள்ளோம் இதில் வடகிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் எமது உறுப்பினர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக 8 மாவட்டங்களை ஒருங்கிணைத்து செயற்பட்டு வருகின்றோம் என்பதனை மன பூர்வமாக அறியத்தருகின்றோம்.

ஈழத்தமிழர் தேசத்தில் பெண்கள் மற்றும் சிறார்களை இலக்கு வைத்து திட்டமிட்டு நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் துயர சம்பவங்கள் மற்றும் தமிழ் மொழி பயன்பாடு அழித்தல் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மாற்றுதல்ல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கும் வெளிக்கொண்டர எமது ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு

Eelam Tamil Women and Children Rights Protection and Promotion Organization முழு மூச்சாக செயற்படும் என்பதை இந்த ஊடக வாயிலாக அறியத்தருகின்றோம். எமது பெண்கள் சிறுவர்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் அளவுக்கு எந்த ஒரு சக்தி வாய்ந்த அமைப்பும் இதுவரை இல்லாத காரணத்தினால் மிகவும் வெளிப்படையான தூரநோக்கு சிந்தனைகளை உள்ளடக்கலாக எமது அமைப்பானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பிற்காக ஒரு நிலையான செயல் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்.

ஈழ தேசத்திலே பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நித்தம் நித்தம் திட்டமிட்டு நடந்தப்படும் கொடுமைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து அவர்களின் அனைத்து நலன்களிலும் அக்கறையுடன் செயற்படும்.

செயற்பாட்டு அமையமாக இந்த அமையம் தன்னை வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் நமக்கு எதிராக ஆக்கிரமிகப்பும் வன்முறைகளுக்கும் அழிக்கும் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அடக்குமுறைகளுக்கும் அடக்கி ஒடுக்கி நசுங்கி கிடக்கும் நிலையை தகர்த்தெறிவதுடன் தமிழ்த் தேசத்திலே திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு யுத்தத்தின் தொடர்ச்சியும் நீட்சியமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலைகளில் அமிழ்ந்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் பெண்களையும் சிறுவர்களையும் எதிர்கால பேராபத்திலிருந்து மீட்டெடுக்க உறுதி கொண்டுள்ளோம்.

திட்டமிடப்பட்ட இன அழிப்பின் அங்கமாக கட்டவிழ்த்து விடப்பட்ட போதைப் பழக்கம் எமது சிறார்களை முழுமையாக அழிக்கும் பேராபத்திலிருந்து மீட்பதுடன் அதனால் குடும்பத் தலைவிகளாக வாழும் தாய்மாரை மட்டுமல்லாது ஏனைய பெண்களும் பேராபத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாலும் அதனிலிருந்து பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடும் நமக்கு உள்ளது.

அது மட்டுமன்றி திட்டமிடப்பட்டு நடந்தேறும் கலாச்சார சீரழிவில் இருந்தும் நமது இளைஞர்கள் யுவதிகள் பெண்களையும் மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததி அழிவையும் பாதுகாக்க வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான நிலை நமக்குண்டு.

மேலும் போருக்குள்ளும் போரின் பின்னரான வாழ்விலும் நமது பெண்கள் சிறுவர்கள் மீது திணித்து நிற்கும் வறுமையையும் வாழ்க்கை கட்டமைப்பு உடைவினையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் விவாகரத்து மணமுறிவுகளும் நமது தமிழ் சமூகத்தின் வாழ்வியல் ஒழுக்கத்தினையும் ஒழுங்கினையும் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையிலே நாம் நமது தேசத்தில் வாழும் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்போம்.

எமது மாபெரும் கட்டமைப்பை விரிவாக்கம் செய்து அனைத்து பெண்களையும் சிறுவர்களையும் ஒடுங்கிணைத்து தமிழர் தேசத்தின் விடுதலையை வென்றெடுப்போம்.

இந்த இந்த அமைப்பானது எந்தவொரு அரசியல் கட்சிகளின் பங்காற்றுதல் எதுவும் இன்றி தனித்து இயங்கும் என்பதனையும் நாமும் எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும் சார்ந்திருக்கமாட்டோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.

அரசியல் கட்சிகளின் பங்காற்றுதல் ஏதுமின்றி இந்த அமைப்பானது தனித்தியங்கும் என்பதனையும் அறியத் தருகின்றோம். எனவே இந்த அமைப்பின் ஊடாக எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்

காலை 8:30 மணிக்கு பெண்கள்,சிறுவர்கள் தொடர்பில் விழிப்புணர்வு கலை நிகழ்வுகள், போதை ஒழிப்பு நாடகம் மற்றும் எனைய கலைநிகழ்வுகளும் நடைபெற உள்ளதால் அனைவரையும் அவ்விடத்தில் வந்து கலந்து கொண்டு அன்றைய மகளிர் தினத்தினை உயிர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு